விஸ்காம் என்பது விஷுவர் கம்யூனிகேசன் என்பதன் சுருக்கமே ஆகும். காட்சித் தொடர்பியல் எனத் தமிழில் சொல்லலாம். கருத்துகள் மற்றும் தகவல்களை வெளிப்படுத்தும் காட்சிக் கூறுகளாகும். எளிமையாக சொல்ல வேண்டும் என்றால் சொல்ல வரும் கருத்துக்களையோ தகவல்களையோ படங்கள் மூலம் வெளிப்படுத்துவதாகும். 1000 வார்த்தைகளால் சாதிக்க முடியாததை ஒரு படம் சாதித்துவிடும் என்பர். அது விஸ்காம் படிப்பினை எளிதில் விளக்கும். விஸ்காமில் அச்சுக்கலை , வரைதல் , வரைகலை வடிவமைப்பு , விளக்கப்படம் , தொழில்துறை வடிவமைப்பு , விளம்பரம் , அனிமேஷன் மற்றும் மின்னணு வளங்கள் ஆகியவை அடங்கும்.