விஸ்காம் படித்தாலும் வேலை கிடைக்கவில்லாயா… ஏன்?

B.Sc. Viscom

விஷுவல் கம்யூனிகேஷன் என்பது தனித்துவமான படிப்பு. கிரியேட்டிவ் திறன் சார்ந்தது. நவீன தொழில்நுட்பங்கள் வழி கற்பைனக்கு உயிர்கொடுக்கும் படிப்பு. உலகம் முழுவதும் வேலைவாய்ப்பும் தேவையும் உள்ள இந்தப் படிப்பு இளைஞர்களை ஈர்ப்பதில் வியப்பில்லைதான். ஆனால் ஏராளமான விஸ்காம் பட்டதாரிகள் பலவிதக் கனவோடு படிப்பை முடித்துவிட்டு, வேலையில்லை என்று வீட்டில் உட்கார்ந்திருக்கிறார்கள் என்பது கவனிக்க வேண்டிய விசயம். வேலை கிடைக்கவில்லை என்பதற்கு பலவித காரணங்கள் உள்ளன. அவற்றை வரிசயாக பார்க்கலாம்

  1. சரியான உட்கட்டமைப்பு இல்லாத கல்லூரிகளில் சேர்வது.
  2. வெறும் தியரியாக மட்டும் படிப்பது.
  3. தொழில் முறை அனுபவம் இல்லாத ஆசிரியர்களால் நடத்தப்படுவது.
  4. தொழில்துறைக்கு தேவையானவற்றை கற்காமல் வெறும் தியரி மட்டும் கற்பது.
  5. மேம்படுத்தப்பட்ட பாடத்திட்டங்கள் இல்லாமல் பழைய பாடத்திட்டங்களையே நடத்துவது.

இவற்றை தவிர்க்க என்ன செய்யலாம்?

கல்லூரியில் சேரும் முன்னர் அந்த கல்லூரிக்கு சென்று தேவையான உட்கட்டமைப்பு இருக்கிறதா என்று நேரடியாக பார்க்க வேண்டும். படிப்பில் பிராக்ட்டில்களை பற்றி கேட்டு அறிந்து கொள்ளவேண்டும். அவற்றை நடத்துவதற்கு அனுபவம் வாய்ந்த ஆசிரியர்கள் இருக்கிறார்களா என்பதை கேட்கவும். பாடத்திட்ட விபரங்களை கேட்கவும். வேலை வாய்பினை ஏற்படுத்தி தருகிறார்களா என்பதை கேட்கவும்.

You may also like these